வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 04.10.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 04.10.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.


14 வாசகர்களிடம் ஒரு விளையாட்டாக அலைபேசியில் எடுத்த 

மினி சர்வே பற்றிய முன்னோட்டத்தை நேற்றைய வாசகர் கடிதத்தில் படித்து விட்டு, பாராட்டி மகிழ்ந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!


உள்ளன்போடு செய்யும் எதுவும் வீண் போகாது என்பதற்கு இந்த மினி சர்வே சரியான சாட்சி என்றே கூறலாம்.


அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசியவர்கள் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மீது அபரிமிதமான பிரியம் வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போது பெரு மகிழ்ச்சி யும் பெருமிதமும் அள்ளுகிறது.


இந்த குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பாளரும் சீப் எடிட்டரும் ஒருவரே என்றறியும் போது நெகிழ்ந்ததை விட அவர்கள் தம் குடும்பத்தினரும் இந்த ப் பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் இயங்கி வருகின்றனர் என்று 

அறிந்து அதிசயித்து நெகிழ்ந்தது குறிப்பிடத் தக்கது.


இந்தக் குறுகிய காலத்தில் தமிழ் நாடு இ பேப்பர் குழுமம் பெற்றிருக்கும் இமாலய வெற்றிக்குப் 

பின்னால், புருவம் உயர்த்த வைக்கும் உன்னதமான உழைப்பு, சத்தம் இல்லாத மவுனத்தில் ஒளிர்ந்து மின்னுவதை

நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


இதையெல்லாம் நமது வாசக சொந்தங்கள் துல்லியமாகப் புரிந்து கொண்டு, பயணம் செய்கிறார்கள் என்பது ஆறுதலான ஆனந்தம்.


சரி, சர்வே மேட்டருக்கு வருவோம்.


மீண்டும் நினைவுப் படுத்துகிறோம்.

இது விளையாட்டாக என்னுள் திடீரென மின்னிய ஐடியா பிரவசத்தால் எடுத்த பெர்சனல் மினி சர்வே.

யாரும் இதை தங்களுக்குள் எதையாவது இணைத்து எதையும் கற்பிதம் செய்ய முனைய வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


மனதில் முதலில் உதித்த கேள்வி தான் 

முதன்மையானதாக சர்வேயில் விஸ்வரூபம் எடுத்தது.


தமிழ் நாடு இ பேப்பரில் எது டாப்?


இந்தக் கேள்வியை மையமாக வைத்துத் தான் சர்வே, தொடக்கம் முதல் இறுதி வரை ஓடியது.


14 ல் 5 பேர்கள் 'தினம் ஒரு தலைவர்கள் ' பகுதியைச் சொல்லிச் சொல்லி வாய் மலர்ந்து மகிழ்ந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.


( வாரம் ஒரு தலைவர் என்பது தானே சரி...

அப்படி இருக்கும் போது வாரம் ஒரு தலைவர்கள் என்று ஏன் குறிப்பிடப் படுகிறது என்று கேட்டு நம்மைத் திக்கு முக்காட வைத்தனர்.

இதற்கு ஆசிரியர் குழுமத்தினர் தான் பதில் தர வேண்டும்!

காரணம் இல்லாமல் அப்படி தலைப்பு போட மாட்டார்கள் அல்லவா?


மீதி 9 வாசக சொந்தங்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... புரிகிறது!



இரண்டு பேர்கள் புதுக்கவிதை பகுதிக்கு 

ஓட்டு போட்டனர்.


ஒருவர் புத்தக மதிப்புரைப் பகுதிக்கு ஆதரவு காட்டினார்.


இன்னும் இருவர செய்திகளின் கனகச்சித கட்டமைக்கு 

ஆதரவு காட்டினார்.


இருவர் நலம் தரும் மருத்துவம் டாப் டாப் என்று பயங்கர குஷியில் கூறினர்.


இன்னொருவர் எல்லா அம்சங்களும் குறை எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு நிறைவு நிறைவு...

குறிப்பிட்டு சொல்ல இயலாது ' என்று பவ்யமாக சொல்லி 

பண்பாடு காட்டினார்!


அதிகாலையில் வந்து ஆஜர் ஆவதை சிந்தை சிலிர்க்க சொல்லி சந்தோஷப் பட்டார் 

14ல் ஆகக் குறைந்த வயதுள்ள இளைய தம்பி!


இந்த மினி சர்வே,

பானை சோற்றுக்கு 14

சோறு பதம் என்று எடுத்துக் கொள்ளலாமா?


பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு.


மீண்டும் சொல்கிறேன்.

ஒன்று மட்டும் உறுதி.


வாசக சொந்தங்கள் மத்தியில் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் ஆரோக்கிய தாக்கம் அற்புதம்... அற்புதம்...

ஆச்சரியம்... ஆச்சரியம்...

ஆனந்தம்.. ஆனந்தம்.



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%