
தென்காசி யில் இருந்து தமிழ் நாடு இ பேப்பரின் வாசகன்
பி.வெங்கடாசலபதி
எழுதும் முதல் வாசகர் கடிதம்:
அதிகாலையில் தினந்தோறும் அலைபேசியில் வந்து
ஆனந்தம் தரும் தமிழ் நாடு இ பேப்பரின் இலவச சேவை நாடு போற்றும் நற் காரியம்.
இதில் வாசகனாக இருப்பதில் பெருமைப்
படுகிறேன்.
செய்திகள் யாவும் நம்பகத் தன்மை மிக்கதாக உள்ளது மிகவும் சிறப்பு.
இதுவரை எங்கள் வீட்டில் வழக்கமாக வாங்கிக் கொண்டிருந்த நாளிதழை இப்போது நிறுத்தி விட்டோம்.
இதனால் எங்களுக்கு
மாத பட்ஜெட்டில் 250
ரூபாய் வரை மிச்சம்.
மேலும் பல விதமான
நன்மைகள் இருப்பதை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். மேலும் தங்கு தடையின்றி தமிழ் நாடு இ பேப்பர் தொடர்ந்து வெளி வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.
நாடே போற்றிப் புகழும் இந்த
நற் காரியத்திற்கு கைம்மாறாக வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்று போட்டி அறிவிப்பு வாசகர்
கடிதத்தில் 18.07.2025
அன்று வேளியாகி இருந்தது. (நெல்லை குரலோன் பொட்டல் புதூர்) நன்றி..
என்னைப் பொறுத்தவரை
தமிழ் நாடு இ பேப்பர் வெற்றிகரமாக தொடர்ந்து வெளி வந்து வாசகர்களாகிய எங்களின் அறிவுப் பசிக்கு தவறாமல்
விருந்து படைக்க வேண்டும்.இதற்காக
வாசகப் பெருமக்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்தனை பண்ண வேண்டும்.
இதுவே தமிழ் நாடு இ பேப்பருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை.
மாதம் ஒரு தொகை
அல்லது வருடம் ஒரு தொகையை சந்தாவாக செலுத்தும் பழக்கம் நமக்கு வந்தால் பத்திரிகை வளர்ச்சி க்கும் நல்லது.
நமக்கும் நல்லது.
தமிழ் நாடு இ பேப்பர் நிர்வாகம் இதற்கு நலலதொரு வழி காட்டலை அறிவிக்க வேண்டும்.
செய்வார்களா?
தொடர்ந்து பயணிப்போம்..
பி.வெங்கடாசலபதி
தென்காசி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?