வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 23.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 23.09.25



செப்டம்பர் 22 தேதியிட்ட அருள் தரும் தெய்வம் இதழ் இன்று கையில் கிடைத்தது.


மகிமைகள் நிறைந்த 

நவராத்திரி கட்டுரை 

கவர் ஸ்டோரியாக வெளியாகி இருந்தது.


ஆண்டு தோறும் தவறாமல் கொலு வைத்து நவராத்திரி விழாவை கொண்டாடி 

மகிழ்வோம். இந்த வருடம் அருள் தரும் தெய்வம் இதழ் மூலம் 

இரட்டிப்பு மகிழ்ச்சி என்றால் மிகையாகாது.


அட்டைப் படத்தைப் பார்த்ததும் கண்ணில் ஒற்றிக் கொண்டு 

கட்டுரை வெளியாகி இருந்த பக்கத்தை வேக வேகமாக புரட்டினேன். படித்தேன்.


தெய்வம் இதழின் ஆசிரியரின் அற்புதமான படைப்பாக மிளிர்ந்து 

நெஞ்சம் நிறைத்தது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், நவராத்திரி விழாவை அர்த்த அடர்த்தியில் பக்தி பரவசத்தில் கொண்டாடி குதூகலித்த பேருணர்வு கிடைத்தது.

மிக்க நன்றியுடன் 

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!


இது மட்டுமா?


ஜென்மாதி ஜென்மத்தின் 

பாவம் போக்கும் வில்வ மரம் --திருச்சி

கே.கணேசன்


சொந்த வீடு யோகம் அமைய..

செவ்வாய்க் கிழமை வழிபாடு -- எம்.அசோக்ராஜா


புனிதங்கள் நிறைந்த புரட்டாசி மாத சிறப்பு 


ஏ.எஸ் கோவிந்த ராஜன்


தர்ப்பணம் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் 


சுகப்பிரசவம் அருளும் 

தாயுமானவர் சுவாமி 

-- சிவமுத்து லட்சுமணன் 


லலிதா சகஸ்ரநாமம்

ஏன் படிக்க வேண்டும்?


---உமா வெங்கடேசன் 


மஹாசக்தியை வணங்கிடுவோம் --

மாலதி சந்திரசேகரன் 


பார்வைக் கோளாறை தீர்த்து வைக்கும் கண்டன் சாஸ்தா 


சிவனின் திரிசூலம் 

வெறும் ஆயுதம் அல்ல

பிரபஞ்ச ரகசியம் 


முடிந்ததை செய்வது கூட உயர்ந்த கைங்கர்யம் தான் 

-- காஞ்சி மஹா பெரியவா 


செய்க தவம் --

கணபதி பாளையம் கோட்டை 


12 ராசியும் ஒவ்வொன்றும் பெற்றுள்ள நற்பண்புகளும் 


எளிமையான 

பரிகாரங்கள் 


ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் 

அற்புதமான வரலாறும் 

சிறப்புகளும்..


--கீதாராஜன்


புரட்டாசி எதற்காக 

சைவ மாதமானது?


சந்திராஷ்டம் நாட்களும் கணக்கிடும் 

எளிய முறைகளும் 


பித்ரு பூஜையில் பெருமாள் கலந்து கொள்ளும் அதிசயக்

கோயில் 


36 பக்கத்தில் அள்ள அள்ளக் குறையாத 

பக்தி மணம் கமழும் பொக்கிஷத்தை அளித்து வாசகப் பெருமக்களை ஆனந்த 

 வெள்ளத்தில் ஆழ்த்தி 

அரும்பணி ஆற்றி யுள்ள தெய்வம் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...

வாழ்த்துகள்.

பாராட்டுக்கள்!


வண்ணம் நிறை அட்டைப் படங்கள்,

பள பளக்கும் காகிதங்கள், நெஞ்சை அள்ளும் கட்டுரைகள்,

மனதுக்கு நிம்மதி அளிக்கும் படங்கள்,

தெளிவும் நளினமும் இணைந்து ஒளி வீசும் கட்டமைப்பு இன்னோரென்ன 

இன்னோரென்ன சிறப்பு அம்சங்கள் கொட்டிக் கிடக்கும் தெய்வம் இதழின் தனி இதழ் விலை ரூபாய் இருபது என்றால் நம்ப முடிய வில்லை.


இது அற்புதமான மக்கள் சேவை.

வாசக பெருமக்கள் 

தங்களின் நட்பு, உறவுகளிடம் தெய்வம் இதழின் மகத்துவத்தை, பெருமைகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

நிச்சயம் இறைவன் அருள் கிட்டும்.


ஒரு சுவாரஸ்யமான அனுபவம்...


தெய்வம் இதழின் 24,

25 பக்கங்களில் வெளியாகி இருக்கும் 

12 ராசியும் ஒவ்வொன்றும் பெற்றுள்ள நற்பண்புகளும் '

என்ற கட்டுரையைப் 

படித்து முடித்ததும்,

இது சரியாக இருக்கிறதா என்று 

பரிட்சித்துப் பார்க்க விழைந்தேன்.

என் மனைவியை அழைத்து ராசி கேட்டேன்.


அந்த ராசிக்கு கட்டுரை யில் குறிப்பிட்டிருந்த 

நற்பண்புகளை சத்தம் போட்டு படித்தேன்.

மிகச் சரியாக இருந்ததை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.


அடுத்து என் ராசிக்கு பார்த்து வாசித்தேன்.

என்ன ஆச்சரியம் பாருங்கள்...

வரிக்கு வரி மிகச் சரியாக பொருந்தியது.

அத்துடன் விடவில்லை.

என் மகள் ராசிக்கு பார்த்தோம்.

நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது.

நானும் என் மனைவியும் அசந்து போனோம்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் எந்த வெளியீடும் சோடை போனதில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு உள்ளம் மகிழ்ந்தோம்.


அருள் தரும் தெய்வம் இதழ் மேலும் மேலும் வளரும். அனைவரின் 

நம்பிக்கையைப் பெற்று மாபெரும் வெற்றி அடையும்.

இது உறுதியிலும் உறுதி!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%