வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து: கணவன், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து: கணவன், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு


முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், பசேரா கிராமத்தைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கும் அஸ்மா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.


இந்நிலையில் அஸ்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் ஆனது முதல் கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தனர். இதையடுத்து நான் என்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.


கடந்த மார்ச் 31-ம் தேதி, என் கணவர் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை ‘தலாக்' என பதிவிட்டு என்னை விவாகரத்து செய்தார். இது சட்டவிரோதம் ஆகும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.


இதுகுறித்து காவல் துறை அதிகாரி ரவிசங்கர் கூறும்போது, “அஸ்மா கொடுத்த புகாரின் பேரில், வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் அஸ்மாவின் கணவர் ஹசன், அவரது தாய் ரஷிதா, 2 சகோதரர்கள் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%