புதுடெல்லி, ஜன. –
டெல்லியில் வரும் 12–ந்தேதி நடைபெறும் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட இருக்கிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:–
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026 பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், பிரதமரிடம் 10 பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்கக் காட்சிகளை வழங்குவார்கள். அப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பாரத் மண்டபத்தில் நடைபெறும் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026–ன் இறுதி அமர்வில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகள் குறித்து இளைஞர்களால் எழுதப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பையும் அவர் வெளியிட உள்ளார்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?