விஜய்யுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் பதில்

விஜய்யுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் பதில்



 திருச்சி,


திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்யுடன் கூட்டணியா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,


“கூட்டணி குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்க வில்லை. எங்களை வழிநடத்துவதே எங்களின் தொண்டர்கள்தான். அமமுக எடுக்கின்ற நிலைப்பாடுதான் வெற்றி கூட்டணியை அமைக்கும்.


இந்த கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்கிற கடமை தொண்டர்களுக்கும், எங்களுக்கும் இருக்கிறது. ஒட்டுமொத்த தொண்டர்களின் நிலைப்பாட்டை எங்களின் நிர்வாகிகள் மூலம் தெரிந்துகொண்டு இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தரக்கூடிய கூட்டணியாக அமைப்போம்.


அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை 3 மாதத்திற்குள் சொல்லுவேன். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் எங்களுடன் பேசுவது உண்மை. ஆனால் நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை”


செங்கோட்டையன் விஜய்க்காக உயிரையும் கொடுப்பேன் என பேசியது குறித்த கேள்விக்கு,


“செங்கோட்டையன் அம்மாவிடம் விசுவாசமான தொண்டனாக இருந்தவர். அவர் தான் தனிமை படுத்தப்பட்டதாக உணர்ந்தபோது மக்களால் பேசப்படும் ஒரு புதிய கட்சியில் தனக்கு அங்கிகாரம் கிடைத்திருப்பதை அவர் பெருமையாக நினைக்கிறார்”.


இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%