விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்: 27–ந்தேதி சேலத்துக்கு பதிலாக கரூரில் பிரச்சாரம்
Sep 24 2025
43

சென்னை, செப். 22–
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இந்த வார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 27–ந்தேதி சேலத்துக்கு பதிலாக கரூரில் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகள் தோறும் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை கடந்த 13ந்தேதி தொடங்கினார். அன்றைய தினம் திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், கடந்த 20ம் தேதி (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் 27ம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதுவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திடீர் மாற்றமாக சேலத்திற்கு பதிலாக கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் கரூர் பிரச்சாரத்துக்காக காவல்துறையிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகளை தவெக நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். முதலில் காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றுவார் எனவும் அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதி வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?