விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்குச் செல்ல எடப்பாடி தயாராகிவிட்டார் டிடிவி தினகரன் பேட்டி

திருவண்ணாமலை, அக். 11–
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தவெக கொடி காட்டப்பட்டது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது. விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்குச் செல்ல பழனிசாமி தயாராகிவிட்டார். எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என விஜய் சொல்கிறார். பழனிசாமி அதற்கு தயாராகிவிட்டாரா?
விஜய் தலைமையை ஏற்கும் வகையில் அண்ணா திமுக பலவீனமாகிவிட்டதா? விஜய் அண்ணா திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விட யோசிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. விஜய் அண்ணா திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக, அண்ணா திமுக தொண்டர்களை வைத்து தவெக கொடியை காண்பிக்கின்றனர் என்றனர்.
இதனைத்தொடர்ந்து கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக அரசின் மேல்முறையீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,“தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் சிபிஐ விசாரணை தேவை இல்லை என அரசு மேல்முறையீடு செய்திருக்கும். உரிமைகளை விட்டுத்தரக் கூடாது என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இப்படி கூறுவதால் திமுகவை நான் ஆதரிப்பதாக சொல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?