விற்ற வீடும்.. வாய்த்த பணியும்

விற்ற வீடும்.. வாய்த்த பணியும்



கடை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக, குடியிருந்த வீட்டையே விற்கும் நிலைக்கு ஆளானான் ராஜேஸ். அந்த வீட்டை விற்ற நாள் முதல் அது இருக்கும் தெருவில் போவதைத் தவிர்த்தான். 

ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை.


விதி அவனை அந்தச் சாலைக்கே இழுத்துச் சென்றது.


அது… அவன் வீடு. ஆனால இன்று அந்த வீட்டிற்கு அவன் செக்யூரிட்டி.


சுவர் நிறம் மாறியிருந்தது. பெயர்ப் பலகை இல்லை. அதற்குப் பதிலாய் "Bank Seized Property” என்ற பலகை.


வியாபாரம் சரிந்த போது

“ஒரு வருடம் பொறுத்துக்கோ”

என்று வங்கி சொன்னது.

பொறுத்துக்கொண்டான்.

வங்கி பொறுக்கவில்லை.


அப்பா வைத்த மரம்

இன்னும் நிழல் தருகிறது.

அம்மா கோலம் போட்ட வாசல்

இப்போது வெறும் தரை.


அந்த தாழ்வாரத்தில் தான்

மகனுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தான். இப்போது அந்த இடத்தில் ஏல அறிவிப்பு ஒட்டியிருந்தது.


வீட்டின் பக்கவாட்டிற்குச் சென்று வாட்ச்மேன் யூனிஃபாரம் அணிந்தான். இன்று அவனுக்கு நைட் ட்யூட்டி.


முதல் ரவுண்ட் போகும்போது

ஜன்னல் ஓரத்தில் நின்று

உள்ளே பார்த்தான் காலியாயிருந்தது. பழைய நினைவுகள் மட்டும் சுவரெங்கும் ஒட்டியிருந்தன.


அப்பொழுது மொபைல் வைப்ரேட் ஆனது.


“Congrats sir.

You are selected as permanent security"

இன்று உங்கள் பணியிடம்:

கீழே அவன் வாழ்ந்த வீட்டின் முகவரி.


அவன் சிரித்தான். அது சிரிப்பல்ல. மனம் உடைந்த சத்தம்.


வீட்டை விற்றான் கடனை அடைக்க.


இப்போது அந்த வீட்டை

காக்கும் பொறுப்பு அவனுக்கே செக்யூரிட்டியாய்.


(முற்றும்)

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%