
G.V.மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ரவிராஜ் ஜுவல்லர்ஸ், மரங்கள் மக்கள் இயக்கம் இணைந்து பேரூராட்சிக்குட்பட்ட அரசு பொது மயானத்தில் புங்கன், அரச, வேம்பு உள்ளிட்ட நிழல் தரும் ஏராளமான மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சுமார் 150 மரக்கன்றுகள் நட்டனர். மரக்கன்றுகள் நடும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன், ரவிராஜ் ஜுவல்லர்ஸ் ரவி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார், ராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ், வெங்கடேஷ், கலைச் செல்வி செண்பகராஜ், வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின் கென்னடி, தமிழரசன், ராஜதுரை, சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?