விளையாட்டு வினையாகுமா......

விளையாட்டு வினையாகுமா......



மாலை நேரம் கதிரவன் மறைந்து இரவை வரவழைத்து எல்லோரையும் துயிலாட அணைத்துக் கொள்ளும் நேரத்தில் 


ஓடி ஆடும் சிறுவர் சிறுமியர்களுக்கு குதுகலமான நேரம் நொண்டி விளையாட்டு, பள்ளாங்குழி, தட்டாங்கல், கோலிக்குண்டு என பல வகைகளில் விளையாடுவதில் பேரானந்தம் கொள்வார்கள் 

அன்று "பாண்டி,

கலைவாணி,செண்பகம், சண்முகம் நால்வரும் ஒன்றுகூடி இன்னைக்கி வேற விளையாட்டு விளையாடுவோம்" என்று பாண்டி சொல்ல,

"அப்பா,அம்மா விளையாட்டு விளையாடுவோம்" என்றாள் கலைவாணி,

"வேண்டாம் போடா வாடான்னு திட்டுவே" என்று சண்முகம் மறுக்க,

"சரிப்பா வீடுகட்டி விளையாடுவோம்" என்று செண்பகம் சொல்லவும் 

"சரிப்பா...நீங்க தனியா இரண்டு பேரு,பசங்க நாங்க இரண்டு பேரு" என்று சண்முகம் சொல்ல,


"டேய்..சேர்ந்தே விளையாடுவோம்" என்று கலைவாணி சொல்ல,

யோசித்த பாண்டி,

"நாங்க,தூங்குற இடம்,சாமான் வைக்கும் இடம் கட்டுவோம்,நீங்க அடுப்படி,சாமிஅறை,கட்டுங்க "என்று சொல்ல 

"சரிப்பா...நீ,சொல்றபடி விளையாடுவோம்" என்று பெரிய இடமா நான்கு பக்கம் தடுப்பு சுவர் போல் மண் அணைத்து பெண்பிள்ளைகள்,தனியாகவும் பசங்க தனியாகவும்,யார் முதலில் கட்டி முடிப்பது என்ற போட்டி போட்டுக் கொண்டு துரிதமாய் செயல்படித்திக் கொண்டிருக்க,நால்வரும் ஒற்றுமையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,கலைவாணி கம்புக்குச்சியை எடுத்து அடுப்புக்கு பள்ளம் தோண்டிக் கொண்டே எதில் இருப்பவனை கவனிக்காமல் மண்ணை வாரி வாரி எறிந்தாள் கலைவாணி, 

அது எதிரே திரும்பி இருந்த பாண்டியின் பின் பக்கமா தலையிலிருந்து முதுப்புறம் சட்டை எல்லாம் படர்ந்திருக்க திரும்பிய பாண்டி,படாரென கலைவாணியின் கன்னத்தில் அடித்தான் தீடிர் தாக்குதலில் அதிர்ந்த கலைவாணி அம்மா...வென கத்தினாள் 

"ஏன்டா கலைவாணிய அடிச்சே..".என சண்முகம் கேட்க, "இங்கே பாருடா..." தலை,சட்டை எல்லாம் மண் அப்பி இருந்தது 

"சரிடா...நீ கலைவாணியிடம் சொல்லி மண்ணை அந்தப் பக்கமா போடச் சொல்லி இருக்கலாம்டா.."

என்றான் 

"பள்ளிக்கூடம் போட்டுப் போர சீருடை இதை இப்படி போட்டுப் போனா...

வாத்தியார் அடிப்பாருடா.."

"ஏன்டா...,ஊலமூக்கு நாயே! அடிச்சே, நீ நாசமா போக,"என திட்டினாள் "கலைவாணி 

போடி கலவாணி சிறுக்கி "என்று பாண்டி பதிலுக்கு திட்டினான்,

சண்முகமும்,செண்பகமும் இருவரையும் சமாதானப் படுத்தினர் 

ஆனால் "நீ விடியறக்குள்ளே எருமை மாட்டு மேலே எம வந்து உன்னைத் தூக்கிட்டுப் போக, செத்துப் போக,காளியாத்தா மாரியாத்தா உன்னை தண்டிப்பாடா பண்ணி "என்று திட்டிக் கொண்டே கலைவாணி வீட்டிற்கு அழுது கொண்டே சென்றாள் 

அவ,தப்பு செய்துட்டு என்னை செத்துருவேன்னு திட்டிட்டுப்போறா"ன்னு சண்முகத்திடம் சொன்னான் 

பாண்டி கலைவாணி சொன்னா பழிக்கும் டா அவ நாக்கு கருநாக்குடா,ன்னு செண்பகம் சொல்லவும் 

"யே,அதெல்லாம் சும்மா" ன்னு ஆறுதல் படுத்தினான் சண்முகம் 

கட்டி இருந்த வீட்டை காலால் தள்ளி விட்டு வீட்டை நோக்கி சென்றனர் 


சட்டையைப் பார்த்தா அம்மா அடிப்பாங்கன்னு அம்மா அடுப்படியில் சமையல் செய்து கொண்டிருக்க


 மெதுவாகச் சென்று அழுக்குத் துணிகள் இருந்த கொடியில் வெள்ளை சீருடை சட்டையைக் கழட்டி போட்டவன் வேறு பக்கமாக இருந்த கலர் சட்டையை எடுத்து போட்டுவிட்டு அடிப்படியில் அம்மா வைப் பார்த்து


 "அம்மா பசிக்குதும்மா" என்று சொல்லிச் சென்றான் "கண்ட இடத்துலே ஆடிட்டு வந்துட்டு

பசிக்குதுன்னு வர்றியா,போடா தங்கச்சி என்னடா பண்ணுது "

வரண்டாவில் எட்டிப் பார்த்தான் தங்கச்சி படுத்திருந்ததைப் பார்த்து தூங்குதும்மா..என்றான் 

"கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டிங்குதுப்பா என்ன பிள்ளைகள்" என முணங்கிக் கொண்டே வேகமாக இரண்டு தட்டில் இரண்டிரண்டு இட்லியை எடுத்து வைத்து சாம்பார் ஊற்றி,பாண்டியிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டு மகளிடம் வந்தாள் 


கை,கால்களை உதறினான் ஓட்டம் பிடித்தான் என்னை விட்ரு நான் வரமாட்டேன்னு சொல்லிக்கொண்டே ஓடினான் எமன் எருமை மாட்டில் இருந்து கொண்டு விரட்டி வருவதைக் கண்டு ஓடினான் 

அவன் பின்னாடியே விரட்டி அருகில் நெருங்கவும்,


 அம்மா...என கத்தினான் பாண்டி அருகில் படுத்திருந்த கண்ணம்மா எழுந்து கண்ட இடத்தில் விளையாடுறது ராத்திரியில அலறி அலறிக் கத்துறது ன்னு சொல்லிக் கொண்டே பாண்டி இந்தப்பக்கம் வந்து படு காலையில மாரியாத்தா கோயில்ல போய் மந்திருச்சு தாயத்து வாங்கி போடனும்" என முணுமுணுக் கொண்டே படுத்தாள் கண்ணம்மா 

கனவு வந்து பாண்டியின் தூக்கத்தை விரட்டியது 

கலைவாணி அழுது கொண்டே திட்டியது நினைவில் வந்து வந்து போனது 

அவ கருநாக்கு காரி சொன்னா பழிக்கும் என்று செண்பகம் சொன்னதும் அவனை பயமுறுத்திக் கொண்டு இருந்தது "நாளைக்கு நா யாரையும் பார்க்க முடியாதா, பள்ளிக்கூடம் போக முடியாதா, அம்மா அப்பா தங்கச்சி யாரும் என்னோடு பேச மாட்டார்களா..

நான் செஞ்சது தப்புதான் கலைவாணிகிட்டே மன்னிப்பு கேட்கனும் மாரியாத்தா...காளியத்தா என்னை மன்னிச்சுடு கலைவாணிய அடிச்சது தப்புதான்" என தூக்கம் வராமல் சாமிகளை வேண்டி புலம்பிக் கொண்டே தூங்கி போனான் 


காலையில் கதிரவன் பளிச்சென எழுந்து தன் பயணத்தை தொடர்ந்தார் 

மேளச்சத்தத் தோடு அழுகுரல் கேட்க கலைவாணி அதிர்ச்சி அடைந்தாள்


 அய்யோ... பாண்டிய கண்டபடி திட்டிட்டேனே பாவம் பாண்டி, நான்தா மண்ணை வாரிப்போடும் போது பாண்டி சட்டையில் தலையில் விழுந்ததைக் கவனிக்கல,என் மேல்தான் தப்பு தான் அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்

கலைவாணி 


சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் சண்முகமும் செண்பகமும் கண்களைத் தேய்த்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர் கலைவாணி வருவதைப் பார்த்ததும் பாண்டி பாவம் நான்தான் தெரியாம செய்திட்டேன்னு அழத் தொடங்கினாள் 

கலைவாணி 


"சரி சரி அழதே வா பாண்டிய பார்க்கப் போவோம்"

" பாண்டி அம்மா திட்டுவாங்க" ன்னு சொல்லித் தயங்கினாள் கலைவாணி 

"சண்முகம் நீ போய் பள்ளிக்கூடம் பாண்டி வரலையான்னு கேட்க்ற மாதிரி அவனைப் போய் பார்த்துட்டு வாடா"ன்னு செண்பகம் சொல்லவும் 


சரி எனச் சென்றான் தூரத்தில் இருந்து பார்த்தான் பாண்டி வீட்டுக்கருகில் மேளம் கொட்டிக் கொண்டு இருந்தனர் 

அருகில் சென்றான் பாண்டி வீட்டுப் பக்கத்தில் வயதான கிழவி இறந்ததற்கு மேளம் கொட்டிக் கொண்டு இருந்தனர்


பாண்டி பாண்டி எனக்குரல் கொடுத்தான் சண்முகம் 


குரல் கேட்டு கண்ணம்மா வெளியே வந்தவள் சண்முகத்தைப் பார்த்ததும் 

டேய் பாண்டி இன்னும் தூங்குறே உன்னோடவன் எல்லாம் பள்ளிக்கூடம் கிளம்பிட்டாங்க இன்னும் தூங்கிட்டு இருக்கே எழுந்திருடா ன்னு அம்மா குரல் கேட்டு கண்களை தேய்த்தபடி எழுந்தான் பாண்டி 



நல.ஞானபண்டிதன்

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%