வயதான பெண்ணுக்கு இதயத்தில் மிகச்சிறிய பேஸ்மேக்கர் பொருத்தி ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை சாதனை
Dec 05 2025
16
திருவாரூர் மாவட்டம், நன்னி லம் பகுதியைச் சேர்ந்த 75 வயது பெண்மணிக்கு திடீர் இதய வலி மற்றும் மூச்சுத் திணறல் கார ணமாக தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு உறவினர் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன், அவருக்கு இதயத் துடிப்பு மிக குறைவாக இருப்பதாகவும், அவசர நிலை யில் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார். மேலும் உறவினர் களின் ஒப்புதலின்படி அந்த பெண் ணுக்கு ஆஞ்சியோ கிராம் செய்யப் பட்டதில், அவருக்கு இதயத்துக்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்கள் செயலிழந்துள்ளதை அறிந்து துரிதமாக தற்காலிக இதய பேஸ் மேக்கர் (TPI) பொருத்தி உயிரை காப்பாற்றினார். இதயத்தின் செயல்பாட்டை சரி செய்ய ஸ்ரீகாமாட்சி மருத்துவ மனையின் இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் தலைமையிலான மருத்துவக் குழுவை கொண்டு. உலகத்தரம் வாய்ந்த கேத்லாப் அரங்கில் உயர் தர உபகரணங்களை பயன் படுத்தி, இதய நுண்துளை ரத்த குழாய் மூலம் Single Chamber Leadless Pacemaker என்னும் மிக சிறிய நிரந்தர பேஸ்மேக்கர் கருவியானது மிக துல்லியமாக வும், குறுகிய நேரத்திலும் ரத்தக் குழாய் வழியாக இதயத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. Leadless பேஸ்மேக்கர் என்பது மிகவும் சிறிய வடிவம் கொண்டது. மேலும் இதில் பேட்டரி கிடை யாது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணுக்கு சுவாச நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இதய துடிப்பு சீராக இருந்தது. மேலும், அவருக்கு உரிய மருத்துவம் அளித்து நலமோடு வீடு திரும்பி னார். டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட Leadless பேஸ் மேக்கர் போன்ற கருவியைப் பயன் படுத்தி, இதய சிகிச்சை அளிப்ப தில் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை முன்னோடியாக உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?