" கொழந்தே....அடி சச்சு !"
கல்லூரிக்கு புறப்பட தயாராக இருந்த சரஸ்வதி பாட்டியின் அழைப்பால் கடுப்படைந்தாள். விடு விடுவென்று அவர் இருந்த அறைக்குள் நுழைந் தாள்.
" பாட்டி ! உங்கக்கிட்ட எத்தன தடவை சொல்லியிருக்கேன் கொழந்தே கொ ழந்தேன்னு கூப்பிடாதீங்கன்னு ! நான் காலேஜ் படிக்கிறேன். என்னைப் போய் கொழந்தேன்னு கூப்பிடறேள்! அதோட என் பேர் சரஸ்வதி. அதை வேற மொட்டையா ' சச்சு'ன்னு உச்சரி க்கிறேள் ? ஏன் இப்படி பண்றேள்?"
" கோபிச்சுக்காதடி கொழந்தே! பாட்டி தானே ஆசையா கூப்பிடறதா நெனை ச்சுக்கோ"
பாட்டியை முறைப்பாகப் பார்த்தவள்,
" சரி. எதுக்கு கூப்பிட்டேள் ? சீக்கிரம்
சொல்லுங்கோ. எனக்கு காலேஜுக்கு
நாழிகை ஆயிடுத்து !" பட படத்தாள்.
" ம்..வந்து..." பாட்டி இழுக்க சரஸ்வதி
பொறுமை இழந்தாள்.
" சரி, யோசிச்சு வைங்க. சாயந்தரம்
பேசலாம். " என்று கூறி நகரும் நேரம்
பாட்டிக்கு அந்த விஷயம் நியாபகம்
வந்தது.
" இருடி, றெக்கை கட்டிண்டு பறக் கறே.." என்றவர் தொடர்ந்தார். " அந்த சீமாச்சு இல்ல..."
" எந்த சீமாச்சு ?"
" அதாண்டி, சொஸைட்டியில வேலை
செய்றானே, எதிராத்து சீமாச்சு !"
" சரி, அவருக்கென்ன?"
" அவனுக்கு தலைச்சன் பிள்ளக் கொ
ந்த பொறந்திருக்குதோல்லியோ?"
" ஆமாம்."
" அதுக்கு என்னம்மோ சர்டிஃபிகேட்..
ஆங்..டெத் சர்டிஃபிகேட் வாங்கிட்
டானோ , ஒனக்குக் தெரியுமா?"
" ஆமாம் கொழந்த பொறந்தா டெத் சர்
டிஃபிகேட் வாங்கணும்..யாராவது போனா பர்த் சர்டிஃபிகேட் வாங்க ணும்.ஏன் பாட்டி இப்படி உளர்றேள் ?"
" ஏண்டி ஏதோ தெரியாம கேட்டுட் டேன். அதுக்கு ஏன் இப்படி சலிச்சுக்
கறே?"
" அதுக்கு நீங்க தமிழ்லயே கேட்டிருக்க
லாமே ?"
" சரி..பிரசவ சர்டிஃபிகேட் வாங்கிட்
டானா ?"
" சரிதான் மறுபடியும் உளர்றேள்.அது
க்கு பிறப்புச் சான்றிதழ்னு பேர் ! பிர
சவ சான்றிதழ் இல்லே !"
" சரி. அதான் வாங்கிட்டானா ?"
பாட்டியின் அருகில் சென்ற சரஸ்வதி
தன் வலது கையை இடுப்பு மீது வைத்
துக்கொண்டு கோபமாக பார்த்தாள்.
" ஏண்டி இப்படி கோபமா முறைக்கி
றே ? நான் அப்படி என்ன கேட்கக்
கூடாதத கேட்டுட்டேன் ?"
" தெரியாமத்தான் கேட்கறேன். வயசான காலத்துல இது உங்களு க்குத் தேவைதானா?உள் நாட்டு விவ காரமே நிறைய இருக்கு. அயல் நாட்டு விவகாரம் எதுக்கு உங்களுக்கு ! மத்தவா விஷயத்தில மூக்கை நீட்டாம அக்கடான்னு இருங்க !" சொல்லிவி ட்டு சரஸ்வதி விரைவாக அங்கிருந்து அகன்றாள்.
" அட ராமா ! இப்படி விவாதம் செஞ்சு ட்டு பதிலே சொல்லாம போறதே இந்தப் பொண்ணு ! சரிதான், இந்தா த்துல நான் சுதந்திரமா வாயத் தொ றந்து பேசக் கூட எனக்கு உரிமையி ல்லாம போயிடுத்து! ஹும்..எல்லாம் கலிகாலம்."
பாட்டியின் முணு முணுப்பு காதில்
விழ சிரித்துக் கொண்டாள் சரஸ்வதி

வி.கே.லக்ஷ்மிநாராயணன்