தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கிராமம், தமிழ்ப் பல்கலைக் கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. துணைச் செயலாளர் சிவசாமி வரவேற்றார். தலைவர் குருமூர்த்தி தலைமை உரையாற்றினார். செயலா ளர் சீதாலட்சுமி செயல் அறிக்கை, பொருளாளர் ராஜன் வரவு- செலவு அறிக்கை வாசித்தனர். இக்கூட்டத்தில், ஜன. 3 ஆம் தேதி சங்கம் சார்பில் சமத்து வப் பொங்கலும், ஜன.26 ஆம் தேதி குடியரசு தின விழாவும் கொண்டாட வேண்டும். விடுபட்ட சாலைகளை அமைத்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருதல், முறையாக குப்பைகளை அள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை, அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை உள்ளாட்சித் துறையினரிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, ஜன.28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட் டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மகளிர் அணி தலைவி கமலா மற்றும் 12 பெண் கள் உட்பட 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைப்புச் செயலாளர் மருதமுத்து நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?