உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
Feb 04 2026
16
சவுதி அரேபியா ஜித்தா புறநகர் பாலைவனத்தில் உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்...
ஜித்தா புறநகர் பகுதியான அல்கும்ராவில்
தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 14 சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்கள் உண்ண உணவின்றி 5 முதல் 7 மாத சம்பளமின்றி சிறை போன்ற ஒரு முகாமில் தவித்துக் கொண்டிருப்பதாக IWF தொண்டரணி
செயலாளர் மங்களக்குடி தாஹா ரசூலுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக ஜித்தா மண்டல தலைவர் கீழை இர்ஃபான் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில்
இருவர் மட்டும் இந்திய தூதரகத்தில் நடந்த ஓபன் ஹவுஸில் தமது புகாரை பதிவு செய்தார்கள்.
இதற்கான வாகன வசதி, உணவு, தூதரக வழிகாட்டல் ஆகியவற்றை IWF நிர்வாகிகள் பனங்காட்டூர் அப்துல் ஹலீம், நெல்லிக்குப்பம் அசரப் ஆகியோர் செய்தனர்.
மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்களை ஒரு சகோதரிடம் பெற்று கடந்த 30-1-26 நள்ளிரவு
மங்களக்குடி தாஹா ரசூல் அவர்கள் இடத்திற்கு சென்று ஒப்படைத்தார்.
மேலும் கடந்த 1-2-26 அன்று IWF நிர்வாகிகள் கீழை இர்ஃபான், அப்துல் மஜீத், சையது இஸ்மாயில், அப்துல் ஹலீம், தாஹா ரசூல் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து விவரங்களை கேட்டறிந்து சட்ட ஆலோசனைகளை வழங்கி ஆறுதல் சொன்னார்கள்
இதற்கான புகார் மற்றும் தூதரக வேலைகளை முடித்துக் கொடுத்து அவர்களை ஊருக்கு அனுப்பும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.
என்றும் சமுதாய பணியில்,
*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)*- தமுமுகவின் அயலக அணி,
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவூதி அரேபியா.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?