உக்கல் அருள்மிகு மடாவளம்ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி தரிசனம்:
Feb 04 2026
18
உக்கல் அருள்மிகு மடாவளம்ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி தரிசனம்:
திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
செய்யாறு பிப்.5,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் மகா ஆரத்தி நிகழ்வு நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் ,காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் கூழமந்தல் அடுத்து உள்ளது உக்கல்.
இங்கு எழுந்தருளி உள்ள மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று யாக வேள்வி பூஜையை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார். அதனைத் தொடர்ந்து கலச புறப்பாடும், சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் அருள் பாலித்தார். மகா ஆரத்தி நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?