விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை
விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனையாளர்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனுவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி மற்றும் இதர பயிர்களுக்குத் தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர்பாஸ்பேட் போன்ற உரங்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எம்ஆர்பிக்கு மேல் விற்கக்கூடாது மானியம் இல்லாத பிற உரங்களுடன் சேர்த்து மானிய உரங்களை விற்பனை செய்யக் கூடாது. பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ அல்லது அங்கிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. விவ சாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை விற்பனை செய்யக் கூடாது. உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது. ஒரே விவசாயியின் பெயரில் தேவைக்கு அதிகமாக உரங்களை விற்பனை செய்யக் கூடாது.உரிமம் பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைக்கக் கூடாது. விவசாயிகள் மண்வள அட்டைப் பரிந்துரைப்படி உரமிட்டுச் செலவைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?