வெனிசுலா ஜனாதிபதி கடத்தல் அமெரிக்காவை கண்டித்து ஜன. 6 சென்னையில் தூதரக முற்றுகை
Jan 06 2026
14
சென்னை: வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்றுள்ள அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் காட்டு மிராண்டித்தனமான செயலைக் கண்டித்து, ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெ ரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து அந்த அமைப்புகளின் மாநிலக் குழுக்கள் விடுத்துள்ள அறிக்கையில், “சர்வதேச சட்டங்களையும், ஒரு நாட்டின் இறையாண்மையையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில் அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியுள்ளது. எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்காகப் பொய்ப் பிரச்சா ரங்களை மேற்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கடத்தியுள்ள அமெரிக்காவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அமெரிக்கா வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அத்துமீறலைக் கண்டித்து ஜனவரி 6 அன்று சென்னையில் அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்ட மும், இதர மாவட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேரணி களும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?