வெனிசுவேலாவுக்கான பஜாஜ் ஆட்டோ வாகன ஏற்றுமதி குறைவு!

வெனிசுவேலாவுக்கான பஜாஜ் ஆட்டோ வாகன ஏற்றுமதி குறைவு!


 


புதுதில்லி: நிறுவனத்தின் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில், 1 சதவீதத்திற்கும் குறைவாகவே வெனிசுவேலாவுக்கான ஏற்றுமதி உள்ளது என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.


நேற்று அமெரிக்கா வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, வெனிசுலா நெருக்கடியில் சிக்கியது.


அமெரிக்காவால் நிக்கோலஸ் மடூரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார் பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா.


நாங்கள் வெனிசுவேலாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதில், 'பல்சர்' மற்றும் 'பாக்ஸர்' வாகனங்கள் வெனிசுலாவில் பிரபலமானவை. ஆனால் இந்த ஏற்றுமதிகள் எங்கள் மொத்த ஏற்றுமதியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.


2026 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில், பஜாஜ் ஆட்டோவின் மொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 13,73,595 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரித்து 16,39,971 வாகனங்களாக உள்ளது.


அதே வேளையில், மற்றொரு இந்திய வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார்ஸ், வெனிசுலாவில் தங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வர்த்தகம் இல்லை என்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%