வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு


(நிலைமண்டில

         ஆசிரியப்பா)


செரிமான மாகும்

சீர்மை யாகும்

துர்நாற்றம் போக்கும்

தூய்மை யாகும்!


எலும்பு வலிமை

எழிலா யாகும்

வலியைக் குறைக்கும்

வளமை யாகும்!


நோயின் தொற்றை

நேர்ந்தே குறைக்கும்

நோயை எதிர்த்து

நிறைவே காணும்!


வாய்ப்புண் வயிற்றுப்

புண்கள் ஆறும்

நோயாம் புற்றை

நொடித்தே ஓட்டும்!


கெட்ட கொழுப்பை

நீக்க உதவும்

கொட்டைப் பாக்கும்

கூடி நிற்கும்!


நோய்களைத் தீர்க்கும்

நேர்ந்தா மருந்தே

வாயில் வைத்தே

வண்ண மாய்மெல்!


இருமலும் சளியும்

எங்கோ ஓடும்

சரியாய் விகிதம்

சாந்தா யமையும்!


வெற்றிலை பாக்கு

வீறுசுண் ணத்தைப்

பற்றுடன் பயன்ப

டுத்து வோமே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%