வேலைக்காரியின் மகள் !

வேலைக்காரியின் மகள் !

வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

22, 22 ஏ, ராமகிருஷ்ணா நகர் மெயின் ரோடு 

ராமகிருஷ்ணா நகர் 

போருர், சென்னை 600 116 


                                                                                                                                    

  வீட்டை விட்டுக் கிளம்பி தெருவில் கொஞ்ச தூரம் சென்றதும் நண்பன் கோபியைச் 

சந்தித்தான் கோபால். சட்டென கோபால் கையைப் பற்றிக் குலுக்கிய கோபி, " கோபால் ! கேள்விப்பட்டேன். கங்கிராட்ஸ் பா !" என்றான் புன்சிரிப்போடு. 


கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக நண்பன் வாழ்த்துகிறான் என்று தெரிய

வில்லை. " எதுக்கு கோபி வாழ்த்து ? நீ வாழ்த்தும்படியாக அப்படியென்ன நடந்தது ?" 


" என்னப்பா ! எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு . நீ இப்படி அமுக்கமா இருக்குறே?" 


" கோபி, எனக்கு ஒண்ணும் புரியல்லை. தெளிவாச் சொல்லு !" 


"உன் பெண் சுந்தரி டென்த்ல ஐநூறுக்கு நாநூத்தி நாற்பது மார்க் எடுத்திருக்காள்னு கேள்விப்பட்டேன். அதைப் பற்றிதான் சொல்கிறேன். ரொம்ப சந்தோஷம்பா !" 


" அட நீ வேற ஏன் என் வயிற்றெரிச்சலக் கொட்டிக்கறே ...என் வீட்டுல வேலை செய்யுற வேலைக்காரியோட பெண் சுந்தரி வாங்கியிருக்குற மார்க் அது ! என் பெண் 370 தான் வாங்கியிருக்கா !" 


" அப்படியா ?"


" ஆமாம், ரெண்டுபேரோட பேரும் சுந்தரிங்குறதால கன்ப்யூஷன் !....ஆனால் ஆஃப்டர் ஆல்

வேலைக்காரியோட பெண் நல்ல மார்க் வாங்கியிருக்கு. ஹூம்..என்னோட பெண்

ஆவரேஜ் மார்க்தான் வாங்கியிருக்கா ! வேலைக்காரியோட பெண்ணுக்கு இருக்குற 

படிப்பறிவு கூட என் பெண்ணுக்கு இல்லாமல் போச்சேன்னு ஒரே ஆதங்கமாயிருக்கு !" 


" கோபால் ! படிப்பறிவுக்கு பணக்காரன் ஏழைங்குற பாகுபாடெல்லாம் தெரியாது.

யார் டிவோஷனோட சின்ஸியரா படிக்கிறாங்களோ அவங்களிடம் படிப்பறிவு வந்து ஒட்டிக்கொள்ளும். எக்ஸாம் எழுதி நல்ல மார்க் எடுக்க வைக்கும். உன் வீட்டு வேலைக்கா ரியின் பெண் நல்லா படிச்சிருக்கா.அதனால பரீட்சையில் நல்ல மார்க் வாங்கியிருக்கா. உன் பெண்ணும் பிரில்லியண்ட்தாம்பா. ஆனால் போதிய உழைப்பில்ல. அதுதான் மார்க் கம்மி.

ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணாதே. அதோடு வேலைக்காரி மகள்மீது கோபமோ அல்லது ஆத்திரமோகொள்றது எந்தவிதத்திலும் நியாயம் இல்லேப்பா...நல்லா சிந்திச்சுப் பாரு !" 


கோபாலுக்கு புரிந்தது. " ஸாரிப்பா ! நீ சொல்றது வாஸ்தவம்தான். ஏதோ ஆற்றாமையால ஆரம்பத்தில கோபப்பட்டேன். இப்போ தெளிவா புரிஞ்சிடுத்துப்பா !" சிரித்தபடி விடை பெற்றான்.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%