ஷபாலி வர்மாவுக்கு ரூ.1.50 கோடி: அரியானா முதல்வர் வழங்கினார்

ஷபாலி வர்மாவுக்கு ரூ.1.50 கோடி: அரியானா முதல்வர் வழங்கினார்


சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக மகுடம் சூடியது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகியாக ஜொலித்தார். அரியானாவைச் சேர்ந்த ஷபாலிவர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் அவர் நேற்று அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது சாதனையை பாராட்டி ரூ.1.50 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார். மேலும் அரியானா மாநில பெண்கள் ஆணையத்தின் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.


‘ஷபாலியின் சாதனை, அரியானா மாநிலத்தின் அனைத்து மகள்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. உங்களது அற்புதமான செயல்பாட்டின் மூலம் தேசத்தின் பெயரை பிரகாசிக்க செய்வதில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என நயாப் சிங் சைனி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%