ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி 22 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா..!
Sep 14 2025
43

வந்தவாசி, செப் 15:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 22 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் மு. ரமணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் பிரியா ரமணன் முன்னிலை வகித்தார். முதல்வர் ருக்மணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, கல்வி இயக்குனரும், தேசிய தர மதிப்பீட்டு குழு உறுப்பினருமான மைதிலி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் கற்றலில் சிறப்படைந்து சமுதாய சிற்பிகளாக வர வேண்டும் என்றும், தங்களது சொந்த காலில் நின்று சாதனை மகளிராக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் இளநிலை 746, முதுநிலை 109, ஆய்வியல் நிறைஞர் 10 பேர் என மொத்தம் 865 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 5 பேர் முதலிடத்திற்கான தங்கப் பதக்கத்தையும், 28 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?