ஸ்ரீ ஐயப்பன் லக்ஷர்ச்சனை வைபவம்

ஸ்ரீ ஐயப்பன் லக்ஷர்ச்சனை வைபவம்

எங்கள் ஸ்ரீ ஐயப்ப பக்தசமாஜத்தின் 43 வது ஸ்ரீ ஐயப்பன் லக்ஷர்ச்சனை வைபவம் சென்ற வாரம் 18 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடந்தது . அதன் சிறப்புகளை அனைவரும் தெரிந்து கொள்வோம் .



அற்புதமான ஆன்மீக நாட்கள் . ஒவ்வொரு நாளும் பரவசம் .

குருபூஜை நாளின் பதினெட்டு படி தத்துவத்தின் அடிப்படையில் குருமார்கள் மும்மூர்த்திகளாக தம்பதிகள் ..முப்பெரும் தேவியர் குமரிகள் கன்யா குழந்தைகள் வடுக்கள் என ஆராதித்து பூஜித்தது மிக அருமை . 

மாலை பஜனை ஆனந்தம் .


வெள்ளிக்கிழமை ருத்ர ஜெபம் ஒரே நேரத்தில் கேட்கும்போது கிடைத்த வைப்ரேஷன் பரம சந்தோஷம் . கூடவே ஹனுமத் ஜெயந்தி ஆராதனையும் வடைமாலையோடு !!

மாலை தேவீமாஹாத்ம்ய பாராயணம் தேவியின் அருளும் நமக்குண்டு என்றது .

மாலை பகவத் சேவை பக்தியோடு இணைய செய்தது. அதனுடன் நாம சங்கீர்த்தனத்திலும் எங்களை திளைக்க செய்தார் நம் குருசாமி . 

முத்தாய்ப்பாக திடீரென சங்கீதத்திற்கு ஜதி போட்டபடி சாய் சந்தோஷ் என்கிற ஐயப்ப பக்தர் ஐயப்பனாக ப்ரத்யக்ஷமாகி மெய்சிலிர்த்து பரவசமாக்கினார் . இது ஒரு இன்ப ஆன்மீக அதிர்வு .


சனிக்கிழமை சுதர்ஷன ஹோமம் கந்தசஷ்டி பாராயணம் கூடவே தெய்வங்களின் அபிஷேகம் செங்கோட்டையின் நாம சங்கீர்த்தனம் இன்று ஆடல் கலைஞனின் ஏகோபித்த ஆட்டம் என்று மானசீகமாக அனைத்து ஆன்மீக அன்பர்களையும் சபரி மலைக்கு அழைத்து சென்று விட்ட உணர்வு!!!

ஆரத்தி அன்னதானம் என செவி மனம் வயிறு என எல்லாம் நிரம்பிற்று !!

மதியம் மூன்றரை மணிக்கு ஸ்ரீ நாராயணீயம் பாராயணம் குருவாயூரப்பனை கண் முன் நிறுத்தியது .


மாலை ஐயப்பன் ஊர்வலம் .

வழக்கம் போல் நாதஸ்வரம் கிளாரினெட் சிங்காரி மேளம் பட்டாசு என்று எதிலும் குறைவின்றி ஐயப்பன் ஊர்வலம் ஆழ்வார்திருநகரில் களைகட்டியது லக்ஷர்ச்சனை முன் தின மாலை !!!!


லக்ஷர்ச்சனை வைபவத்தின் விசேஷ நாளான ஞாயிற்று கிழமை அனைத்து விளக்குகளும் மிக மிக அழகான அலங்காரத்தில் மூன்று ஆவர்த்தி ஐயப்பன் லக்ஷர்ச்சனை மிக மிக சிறப்பாக நடந்தது . ஒவ்வொரு ஆவர்த்தி முடிந்ததும் பஞ்சவாத்தியம் சிங்காரி மேகம் நாதஸ்வரம் கிளாரினெட் என்று மிக அசகான சாந்நித்யத்தில் ஆழவார்திருநகர் மக்கள் திளைத்தனர் . 

நான்கு நாட்களும் வருவோர் போவோர் அனைவர்க்கும் அன்னதானம் . 

நான்கு நாட்களும் வீட்டை மறந்து ஐயப்பனை மட்டுமே நினைக்க செய்த குருசாமிக்கும் அவர் டீமுக்கும் என்றும் ஐயப்பன் அருளும் ஆசியும் கிடைத்து கொண்டே இருக்க இறைவனை வேண்டுகிறேன் .

இந்த சமாஜத்தில் இணைந்து இருப்பதில் மிக மிக பெருமை அடைகிறேன் . 

இந்த ஆன்மீக வைபவத்திற்கு இன்னும் ஒரு ஆண்டு காத்து இருக்க வேண்டும் .

ஸ்வாமியே சரணம் ஐயப்பா.


Chellam sekar

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%