ஹாங்காங்கில் 8 அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் 8 அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் 8 அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு

70 பேர் படுகாயம்; 279 பேரை காணவில்லை

 

ஹாங்காங்: ஹாங்​காங் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களில் ஏற்​பட்ட தீ விபத்​தில் இது​வரை 75 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 70-க்​கும் மேற்​பட்​டோர் பலத்த தீக்​காயமடைந்து உள்​ளனர். 279 பேரை காணவில்லை.


ஹாங்​காங்​கின் டய் போ பகு​தி​யில் வாங் பக் கோர்ட் என்ற அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகம் உள்​ளது. இதில் 8 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் உள்​ளன. ஒவ்​வொரு அடுக்​கு​மாடி குடி​யிருப்​பும் 31 மாடிகளை கொண்​ட​தாகும்.


ஒட்​டுமொத்​த​மாக 2,000-க்​கும் மேற்​பட்ட வீடு​கள் உள்​ளன. இந்த வீடு​களில் சுமார் 5,000 பேர் வசித்து வந்​தனர். கடந்த சில மாதங்​களாக வாங் பக் கோர்ட் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் பராமரிப்பு பணி​கள் நடை​பெற்று வந்​தன. இதற்​காக சாரம் அமைக்க மூங்கில் கட்​டைகளும் தூசி பறக்​காமல் இருக்க தார்​பாலின் துணிகளும் பெரு​மள​வில் பயன்​படுத்​தப்​பட்​டன.


இந்த சூழலில் கடந்த புதன்​கிழமை பிற்​பகலில் வாங் பக் கோர்ட் வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. மூங்​கில் சாரம், தார்​பாலின் காரண​மாக 8 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களுக்​கும் தீ மளமளவென்று பரவியது. பராமரிப்பு பணி காரண​மாக பெரும்​பாலான வீடு​களின் ஜன்​னல்​கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததன. இதன்​காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டதை பொது​மக்​களால் உடனடி​யாக அறிந்து கொள்ள முடிய​வில்​லை.


ஒரே நேரத்​தில் 8 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களி​லும் வானளா​விய உயரத்​துக்கு தீப்​பற்றி எரிந்​தது. சுமார் 20 மணி நேர போராட்டத்துக்​குப் பிறகு தீ அணைக்​கப்​பட்​டது. ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு மற்​றும் மீட்​புப் பணி​களில் ஈடுபட்​டனர். தீ விபத்து நேரிட்ட பகு​தியை ஹாங்​காங் தலைமை செயல் அதி​காரி ஜான் லீ நேற்று பார்​வை​யிட்​டார்.


அவர் கூறிய​தாவது: வாங் பக் கோர்ட் வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் 75 பேர் உடல் கருகி உயி​ரிழந்​தனர். முதல்​கட்ட கணக்​கெடுப்​பின்​படி 279 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.


முதல்​கட்ட விசா​ரணை​யில் சிகரெட்டை அணைக்​காமல் வீசியதால் தீ விபத்து ஏற்​பட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் பராமரிப்புப் பணியை மேற்​கொண்ட நிறுவனத்தின் 3 மூத்த அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்டு உள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%