செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
*மூடூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் கார்த்திகை பஞ்சமி உற்சவம்*
Nov 25 2025
67
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில்
கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் அலர்மேல் மங்கை தாயாருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%