*ஸ்ரீ கோதண்டராமர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா வைபவம்...!*
Nov 09 2025
10
வந்தவாசி, நவ 10:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனைக் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மண்டல பூஜை வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் பூஜை முறைகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற மண்டல பூஜை பூர்த்தி விழா யாகசாலை பூஜையுடன், வேத மந்திரங்கள் முழங்க கலச நீர் பூஜிக்கப்பட்டு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு மூல மூர்த்திகள் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?