6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!
Jul 25 2025
11

புதுடில்லி:
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26,770 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இது குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில்; கடந்த 2024ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்துகளில் 54,609 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி) இருந்து மே மாதம் வரையில் நிகழ்ந்த விபத்துகளில் 26,770 பேர் பலியாகியுள்ளனர்.
அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுவியுள்ளது. டெல்லி-மீரட் விரைவுச்சாலை, டிரான்ஸ்-ஹரியானா, கிழக்கு புற விரைவுச்சாலை, டெல்லி - மும்பை விரைவுச்சாலை போன்ற தேசிய விரைவுச்சாலைகளில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.எஸ்., அமைப்பானது, நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஏற்படும் சம்பவங்களை விரைவாகக் கண்டறிவதற்கும், நெடுஞ்சாலைகளை திறம்படக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?