tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள், கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தெட்டு நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டுத் திரும்பும் வழக்கம் இருக்கிறது. இவ்வேளையில், நாமும் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த  தகவல்கள்.

ஐயப்பன் சிலை

சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை 1950 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும்? என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் பி. டி. ராஜன் ஆகியோர் பெயர்கள் வந்தன. அவர்களிருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கச் செய்து சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.


ஹரிவராசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு வேளையில், நடையடைப்புக்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. சபரிமலையில் இறைவன் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சந்நிதியில் சுவாமி அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோயில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கோயில் நடையில் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடல் ஒலிபரப்பப் படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். 


இருமுடி வண்ணங்கள்

சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இறைவனுக்குப் படைப்பதற்கான ‎பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்தும் , பருத்தித் துணியில், ‎கைகளால் தைக்கப் பெற்ற இரு அறைகள் கொண்ட பையினை பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளையும்  பயன்படுத்துகின்றனர்.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாக இருக்கிறது. மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர். அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த நாட்கள் முழுவதும் அமைந்தன. கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க