அக்னி-5’ ஏவுகணை சோதனை வெற்ற: 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது

அக்னி-5’ ஏவுகணை சோதனை வெற்ற: 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது

புதுடெல்லி:

கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது.


நாட்​டின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம்​(டிஆர்​டிஓ) உரு​வாக்கி வரு​கிறது. அவற்​றில் மிக​வும் சக்தி வாய்ந்​தது அக்​னி-5 ஏவு​கணை. அணு ஆயுதங்​களு​டன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது.


இந்த ஏவு​கணை ஒடி​சா​வின் சண்​டிப்​பூரில் உள்ள பரிசோதனை மையத்​தில் நேற்று முன்​தினம் பரிசோ​திக்​கப்​பட்​டது. அப்​போது ஏவு​கணை​யின் அனைத்து தொழில்​நுட்ப செயல்​பாடு​களும் சரி​பார்க்​கப்​பட்​டன. இந்த சோதனை வெற்​றிகர​மாக நடை​பெற்​ற​தாக பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​தது. அடுத்​த​தாக 7,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் வகையில் அக்னி ஏவு​கணையை மேம்​படுத்​தும் முயற்​சி​யில் டிஆர்​டிஓ இறங்​கி​யுள்​ளது.


பாகிஸ்​தான் பதற்​றம்: அக்​னி-5 ஏவு​கணையை இந்​தியா மீண்​டும் வெற்​றிகர​மாக சோதித்​தது பாகிஸ்​தானில் பதற்​றத்தை ஏற்படுத்​தி​ உள்​ள​து. அங்​குள்ள எஸ்​விஐ (போர் உத்தி தொலைநோக்கு மையம்) என்ற சிந்​தனை அமைப்பு பாகிஸ்​தான் பிரதமர் ஷெரீப் மற்​றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோ​ருக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.


எதிர்​காலத்​தில் 8,000 கி.மீ செல்​லும் ஏவு​கணை​களை இந்​தியா தயாரிக்​கும்​போது அவற்​றின் மூலம் அமெரிக்​கா​வின் வாஷிங்​டன், ரஷ்​யா​வின் மாஸ்கோ ஆகிய நகரங்​களை தாக்க முடி​யும். எனவே, பதற்​றத்தை ஏற்​படுத்​தும் நடவடிக்​கைக்கு பதிலாக பேச்​சு​வார்த்​தை​யில் இறங்க வேண்​டும் என இந்​தி​யா​வை உலக நாடு​கள் வற்​புறுத்​த வேண்​டும்​ என எஸ்​விஐ கூறி​யுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%