ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல்

ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி:

ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.


ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்​லைன் விளை​யாட்​டு​கள் மூலம் இழப்​ப​தாக அரசு மதிப்​பீடு​கள் தெரிவிக்​கின்​றன. ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினரும் இது சம்​பந்​தப்​பட்ட தீய விளைவு​கள் குறித்து கவலை எழுப்​பி​யுள்​ளனர் என்று அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.


ஆன்​லைன் சூதாட்​டத்​தில் பணம் வைத்து விளை​யாடும் பலர் தங்​களது சேமிப்பை இழந்து கடனாளி​யாகி தற்​கொலை செய்து கொள்​ளும் சம்​பவங்​கள் நாட்​டில் அதி​கரித்து வரு​கின்​றன.


இதனை கருத்​தில் கொண்டு பணம் வைத்து விளை​யாடும் ஆன்​லைன் விளை​யாட்​டு​களுக்கு தடை விதிக்​கும் வகை​யில் ஆன்​லைன் கேமிங் ஒழுங்​கு​முறை மற்​றும் மேம்​பாட்டு சட்ட மசோதா நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. இது சட்​ட​மாகும்​போது, விதி​களை மீறு​வோருக்கு 3 ஆண்டு சிறை அல்​லது ரூ.1 கோடி அபராதம் வி​திக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%