அதிமுக நடத்திய போராட்ட பட்டியலை வெளியிட தயாரா? பெ. சண்முகம் சவால்
Aug 09 2025
22

சென்னை, ஆக.9:
அதிமுக நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதளப் பக்கத்தில் பெ. சண்முகம் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஈடி, ஐடி ரெய்டுக்குப் பயந்துபோய், பாஜக-வுடன் கூடா நட்பு கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்டுகளைப் பார்த்து சீட்டுக்காக பயந்து போய் போராடவில்லை என்று கூறுகிறார். நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார். ஆனால், எங்களைப் போராடவில்லை என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கான பிரச்சனையில் எத்தனைப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார், என்ற பட்டியலை வெளியிடத் தயாரா?” என்று பெ. சண்முகம் சவால் விடுத்துள்ளார். மேலும், “மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தான்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?