அமெரிக்க துணை ஜனாதிபதியான ஜே.டி. வான்ஸ் எலான் மஸ்க் அரசியல் கட்சியைத் துவங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மேலும் எலான் மஸ்க் குடியரசுக் கட்சிக்குள் இருந்து பணியாற்றி னால் அதிக செல் வாக்கை செலுத்தலாம் என்றும் அவர் கூறி யுள்ளார். “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் துவங்கப் போவதாக மஸ்க் கூறிவந்த நிலையில் அத்திட்டத்தை கைவிட்டு தனது நிறுவனங்களில் கவனம் செலுத்த முடி வெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் வான்ஸ் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் விதித்த வரிகளானது பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடு களை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா வின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரிய ரும் பொருளாதார நிபுணருமான ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார். பிரேக்கிங் பாயிண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள் ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: டொனால்டு டிரம்ப் இந்தியாவின் மீது 50 சதவீதம் வரை அபராத வரியை விதித்துள்ளார். இது மிகவும் தவறு. இந்த நடவடிக்கையின் மூலம் பிரிக்ஸ் கூட்ட மைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுவடைய உதவி செய்துள்ளார். இந்தியாவின் மீது வரிகள் விதித்திருப்பது புத்திசாலித்தனம் என நினைக்கக் கூடாது. இது ஒரு நாசவேலை. இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் செய்யப்பட்ட மிக மோசமான முட்டாள்தனமான நடவடிக்கையாகும் என்று சாக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த வரிகளானது ஆசிய நாடு களில் அமெரிக்காவுக்கான மிக முக்கியமான நண்பனாக உள்ள இந்தியாவுடனான உறவை நாசமாக்கிவிடும் அபாயம் உள்ளது. இந்த வரிகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். குறிப்பாக இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு ஒரே இரவில் பிரிக்ஸ் நாடு களை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றிணைத்துள்ளது என அவர் அழுத்த மாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஒருங்கி ணைப்பானது அமெரிக்காவின் சர்வதேச அரசி யல் நலன்களை (ஆதிக்கத்தை) உடைக்கும் வகையில் உள்ளது எனவும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அதாவது டிரம்ப் செய்த தவறு மாபெரும் சக்தியை ஒருங்கிணைக்கிறது என குறிப்பிட்டார். மேலும் இந்த வரிவிதிப்புக்கு பின்னால் உள்ள டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகரான நவாரோ பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பது போல் தெரிகிறது. அவர் திறமையற்றவர் எனவும் சாக்ஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.