கனிமொழிக்கு பெரியார் விருது திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு
Aug 24 2025
12

சென்னை, ஆக.25-
திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்.பியும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் 'பெரியார்', 'அண்ணா', 'கலைஞர்', 'பாவேந்தர்', 'பேராசிரியர்', 'மு.க.ஸ்டாலின்' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு-
திமுக முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி, கரூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. திமுக துணைப் பொதுச் செயலாளரும் - திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது. தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது.
அண்ணா நகர் பகுதி முன்னாள் செயலாளரும் - அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. திமுக மூத்த முன்னோடியும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் -குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது. திமுக ஆதி திராவிடர் நலக்குழுத் தலைவர் மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு மு..க.ஸ்டாலின் விரும் வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?