முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்..நயினார் நாகேந்திரன் உறுதி

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்..நயினார் நாகேந்திரன் உறுதி


திருச்சி, ஆக.25-

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி- . உலகத்தில் எந்த நாட்டுக்கு போனாலும் அவர்களுக்கென்று தனி மரியாதை இருக்கின்ற ஒரே தலைவர் பிரதமர் மோடி.

யாரோ ஒருவர்(விஜய்) பொருந்தா கூட்டணி என சொல்கிறார். அவர் எத்தனை எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ளார்? எத்தனை எம்.பி.,க்களை வைத்துள்ளார்? எத்தனை கவுன்சிலர்கள்? வைத்திருக்கிறார்?   

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிறது. சிறு குழந்தை களுக்கு எதிராக பாலியல் சீண்டல் நடக்கிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது போதை பழக்கத்தோடு வருகின்றனர். 

எங்கள் கூட்ட ணி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தர் முடிந்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் முடிவு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின் முதல்வர் வேட்பா ளர் எடப்பாடிதான். திமுக கூட்ட ணியில் இருந்து சில கட்சிகள் நிச்சய மாகவருவார்கள். காலம் நிறைய இருக்கிறது. வளமான கூட்டணி தான் வெற்றி பெறும். எம்ஜிஆர் கொள்கை களை கடைப்பிடிக்கின்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%