துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்
Aug 11 2025
12

டெல்லி,
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்தை பெற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவெடுத்துள்ளார். அதேவேளை, துணை ஜனாதிபதி வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த பின்னர் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?