ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி, ஆக.9-


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். உக்ரைன் போருக்கு தீர்வு காணுமாறு அவர் வலியுறுத்தினார்.


பிரதமர் மோடி நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.


அப்போது, உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரின் தற்போதைய நிலவரம் குறித்து புதின் எடுத்துரைத்தார். அதற்கு பிரதமர் மோடி, உக்ரைன் போருக்கு அமைதி தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்ைட மீண்டும் வலியுறுத்தினார்.


இந்தியா-ரஷியா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.


தொலைபேசி பேச்சு குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


என் நண்பர் ரஷிய அதிபர் புதினுடன் விரிவாக உரையாடினேன். உரையாடல் சிறப்பாக அமைந்தது. உக்ரைன் போரின் தற்போதைய நிலவரம் குறித்து கூறியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.


இருதரப்பு உறவின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தோம். இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதி பூண்டோம். இந்த ஆண்டு இந்தியா வரும் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதை காரணமாக வைத்து, இந்திய பொருட்கள் மீது அடுத்தடுத்து 2 தடவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரி விதித்தார். அதனால் இந்திய பொருட்கள் மீதான வரி, 50 சதவீதமாக உயர்ந்தது.


இந்த வரிவிதிப்பு நியாயமற்றது என்று ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பின்னணியில், புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.


இதற்கிடையே, ரஷிய அதிபர் புதினை சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். புதினின் வேண்டுகோளின்பேரில், இந்த உரையாடல் நடந்தது.


அப்போது, உக்ரைன் போர் நிலவரம் குறித்தும், ரஷியா-அமெரிக்கா இடையிலான சமீபத்திய பேச்சுவார்த்தை குறித்தும் புதின் எடுத்துக்கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%