புதுச்சேரி மதுபான ‘பாரில்’ தகராறு: தமிழக இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற பவுன்சர்

புதுச்சேரி, ஆக. 10–
புதுச்சேரியில் தனியார் மதுபான பாரில் நடந்த மோதலில் தமிழக இளைஞரை பவுன்சர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மிஷின் வீதியில் தனியாருக்குச் சொந்தமான ரெஸ்டோ பாரில் தமிழக இளைஞர் சண்முக பிரியன் மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பவுன்சர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பவுன்சர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சண்முக பிரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர் மேலூரை சேர்ந்த ஷாஜன் காயமடைந்ததார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பவுன்சரை கைது செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஷாஜனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாரில் மது அருந்தியபோது பெண் ஒருவரை இடித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?