மக்கள் நல்வாழ்வுத்துறையில் 644 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மக்கள் நல்வாழ்வுத்துறையில் 644 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக 22–


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 644 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார். 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள்,


மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-–2 (பற்றவைப்பவர்) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள்,


மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட 17 மருந்துகள் ஆய்வாளர்கள், குடும்ப நல இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் இதில் அடங்குவர்.


இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார்,


மருந்து கட்டுப்பாடு இயக்குநர் (பொறுப்பு) ஆர். லால்வேனா, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவர் உமா மகேஸ்வரி, நோய் தடுப்பு மருந்து இயக்குநர் எ.சோமசுந்தரம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் த.க.சித்ரா, மருத்துவக் கல்வி இயக்குநர் தேரணிராஜன், குடும்ப நல இயக்குநர் வெ. சத்யா, தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத் துறை இயக்குநர் எஸ். நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%