வந்தவாசி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்: எம்பியிடம் வலியுறுத்தல்
Aug 10 2025
14

வந்தவாசி, ஆக 11:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்கள் தொழில் சார்ந்த கல்வியை பயிலவும் மேலும் உடனடி வேலை வாய்ப்பு மேற்கொள்ளவும் வந்தவாசி வட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைத்திட வலியுறுத்தி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆரணி எம்பி எம்எஸ். தரணி வேந்தன் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தார். மேலும் மகளிருக்கென தனி அரசு கல்லூரி அமைத்திட வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வெண்குன்றம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசின் வரன்முறைக்கு உட்பட்டு பரிசீலனை செய்வதாக எம்பி தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?