வலங்கைமானில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு
Aug 18 2025
10

வலங்கைமானில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் முத்தான திட்டங்களில் ஒன்றாக தாயுமானவர் திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தாயுமானவர் திட்டம் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஒவ்வொரு மாதமும் 2- சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள ரேசன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம் இருந்து பெறப்பட்டு அந்தந்தப் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூடிய வேன்களில் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் போது மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு செய்யும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் கொண்டு சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?