வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கதிர் ஞானி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான வீ. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயங்கள் வழங்கினார். முன்னதாக ஆசிரியர் யுவராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர் சின்னதுரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?