tamilnadu epaper

அன்பார்ந்த போட்டித்தேர்வு மாணவர்களே!

அன்பார்ந்த போட்டித்தேர்வு மாணவர்களே!

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனித்த நாளைய அரசு அதிகாரியாக பணியாற்ற வாழ்த்துகிறேன். உங்களின் வெற்றி தற்போது தள்ளிப் போகலாம் ஆனால் நிச்சயம் ஒரு நாள் வெல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களை அடுத்த இலக்காக குரூப் 2/2ஏ தேர்வுக்கு தயாராகுங்கள். குரூப் 2/2a முதன்மை தேர்வு மிகவும் எளிதாக இந்த ஆண்டு மாற்றி உள்ளனர். இதனை நமது நம்பிக்கைக்கு உந்துதலாக வைத்து எதிர் கொள்ளுங்கள்

 குரூப் 2 /2ஏ முதல்நிலைத் தேவை 200 கேள்விகள் (300 மதிப்பெண்கள்) கொண்ட பழைய நடைமுறையாகவே உள்ளது.

இதில் தகுதி நிலை அடையும் மாணவர்கள் முதன்மை தேர்வு குரூப் 2 பதவிக்கு விரிவான விடை எழுதும் கேள்விகளாகவும், குரூப் 2ஏ பதவிகளுக்கு கொள்குறி வினாக்கள் கொண்டதாகும் அமைந்துள்ளனர்.

 இதனால் குரூப் 2ஏ மிகவும் எளிதாகப் பட்டுள்ளதால் விரைவில் அரசு அதிகாரியாக மாற முயற்ச்சி எடுங்கள் தமிழ்நாடு இ பேப்பர் வாயிலாக இத்தேர்வுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தொடர்ந்து வழங்க உள்ளேன்.மேலும் தேர்வை எப்படி எதிர்கொள்வது? தேர்வுக்கு எப்படி தயாராவது? மற்றும் தேர்வுக்கு தேவையான குறிப்புகளை இனிவரும் காலங்களில் தொடர்ந்து பதிவிடுகிறேன் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் குறள்- 619 வாழ்த்துக்களுடன் 

க. சக்திவேல் BA. DTED

போட்டித்தேர்வு பயிற்சியாளர்

அறிவுச்சுடர் அகாடமி

அருப்புக்கோட்டை