சென்னை, மே 4-
மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்குடன், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளும் 100 சதவிகிதம் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
அதிரடி உத்தரவு
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அல்லது பிற ஊழியர்கள் மீது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் எழுந்தால், அவர்களை 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்த வகை புகார்களை முதற்கட்டமாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (ஞிசிறிளி) விசாரிப்பார். இந்த விசாரணை காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு இணையாக நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.