tamilnadu epaper

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு



தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் தூத்துக்குடி அரசு ஊழியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தலைவர் திரு. வேலவன் தேர்தலை நடத்தினார்.மாவட்டத் தலைவராக ஆனந்தராஜ், மாவட்டச் செயலாளராக பூப்பாண்டி, மாவட்டப் பொருளாளராக ராஜதுரை, , மாவட்ட சட்டச் செயலாளராக கனகராஜ், தலைமை இடத்துச் செயலாளராக அந்தோணிசாமி, செய்தித் தொடர்பாளராக பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர்களாக ஜெகநாதன், ரஞ்சித்குமார், மாவட்ட இணைச் செயலாளர்களாக கல்யாணசுந்தரம், முருகேசன், ரியாஸ், மகளிரணிச் செயலாளர்களாக வசந்தி, பொன்செல்வி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக சேகர், கணேசமூர்த்தி, ராஜ்குமார், அப்துல்கபூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.