tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்*

ஆடி மாதம் அம்மன் மாதம்*

மாசாணியம்மன்*, பொள்ளாச்சி

 

 பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் ஆனை மலை பகுதியில் இந்த திருக்கோயில் அமைந்திருக்கிறது.

 

மயானத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் அம்மன் மாசாணியம்மன் என்று அழைக்கப் படுகிறாள் .

 

மயான சயனி என்பது காலப் போக்கில் மாசாணியம்மன் என்றாகி விட்டது.

 

தாடகை வதம் செய்ய பராசக்தியை வேண்டுகிறார் ஸ்ரீராமபிரான். தன்னை மயான மண்ணில் செய்து வழிபட்டு சென்றால் தாடகை வதம் முடியும் என்று பராசக்தி அருளுகிறாள். அம்மை சொன்னது போலவே ஸ்ரீ ராமபிரான் மயானத்திலிருந்த மண்ணை எடுத்து அம்பிகை திருமேனியை உருவாக்கினார். 

ஆகமவிதிப்படி பூஜை செய்த ஸ்ரீ ராம பிரானின் முன் மயான ருத்திரியாக தோன்றிய ஆதி பராசக்தி வரமளித்து மறைந்தாள் என்கிறது இந்த திருக்கோயிலின் தல வரலாறு.

 அம்மன், 17 அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலைவைத்து ,கிழக்கு நோக்கி பாதங்களை நீட்டி சயனித்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

 

தேவியின் திருத்தலங்கள் தொடரும்...

 

கீதா ராஜா சென்னை