புட்லூர் அம்மன்
வெறும் மூன்றே எலுமிச்சம் பழங்களில் எல்லா வரங்களையும் அள்ளித் தருகிறாள் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோயில் கொண்டுள்ள பூங்காவனத்தம்மன்.
மஞ்சளும் குங்குமமும், வேப்பிலையும் மணக்கும் சந்நிதிக்குள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் படுத்த நிலையில் அருள் பாலிக்கிறாள் பூங்காவனத்தம்மன்.
அருகில், விநாயகரும் தாண்டவராயன் எனும் திருநாமத்துடன் நடராஜ பெருமானும் காட்சி தருகிறார்கள்.
நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.
கீதா ராஜா சென்னை