உஜ்ஜயினி மாகாளி*
அன்னை சக்திதேவியின் உடற்கூறுகள் விழுந்த 51 இடங்களில் உஜ்ஜயினி மகாகாளி பத்தாவது சக்தி பீடமாக விளங்குகிறது. மத்திய பிரதேசத்தில், உஜ்ஜயினி பகுதியில் மங்கள சண்டி என்ற பெயரில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். இது தேவியின் மேல் உதடு விழுந்த இடமாக கருதப்படுகிறது.
இங்கே அன்னை, அசுரர்களை அழிக்கும் ஹரசித்தி தேவியாகவும், மகாகாளியாகவும், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அசுர குணங்களை அழித்து மங்களம் அருளும் மங்கள சண்டியாகவும் விளங்குகிறாள். விக்ரமாதித்யன் ஆண்ட இந்த உஜ்ஜயினி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போபால், இந்தோர் அருகில் உள்ள அழகான சிறிய ஊர்.
கீதா ராஜா சென்னை