புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்*
ஸிவ - ஸக்தி: காம: க்ஷித - ரத ரவி: ஸீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா -மார ஹரய:
-செளந்தர்ய லஹரி
வர்ணிப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அழகு ரூபமாக வீற்றிருக்கிறாள் அன்னை ஸ்ரீபுவனேஸ்வரி. புதுக்கோட்டை நகரில்!
மூலஸ்தானத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில், அழகான தோற்றத்துடன் சகல லட்சணங்களும் அமைந்து ஞானமே வடிவாக அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப காட்சி தருகிறாள் அன்னை புவனேஸ்வரி. இங்கு ஸ்ரீசக்ர மகாமேரு உள்ளதால் சகல தோஷங்களையும் போக்கி நலம் யாவும் தரும் திருத்தலமாய் விளங்குகிறது.
"நமது பூமியைப் போல் எண்ணற்ற உலகங்கள் உள்ளன' என்கிறது வேதம். அந்த உலகங்கள் அனைத்திற்கும் அன்னை புவனேஸ்வரியே அதிபதி. புவனம் முழுதும் காப்பவள் என்பதால் இவள் "புவனேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.
கீதா ராஜா சென்னை