ஆல்ஃபிரட் சூறாவளியால் ஆஸ்திரேலியா வில் ஏற்பட்ட மோசமான மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக 2,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவ னங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் 400 கிலோமீட்டர் சுற்றள விற்கு மோசமான வானிலை நிலவும் எனவும் வெள்ள அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.